பட மூலாதாரம், Reuters
நேபாளத்தில் இந்திய நிறுவனம் ஒன்று பெரிய அளவிலான நீர்-மின்னுற்பத்தி ஆலையொன்றை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
மேல்-கர்ணாலி நீர்- மின்னுற்பத்தி ஆலை ஜிஎம்ஆர் நிறுவனத்தால் ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகின்றது.
இந்த ஆலையிலிருந்து உற்பத்தியாகும் பெரும்பான்மை அளவு மின்சாரம் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளது.
நீண்டகாலமாக மின்சாரப் பற்றாக்குறையால் திண்டாடும் நேபாளத்துக்கு, மொத்த மின்உற்பத்தியில் 12 வீதம் இலவசமாகக் கிடைக்கும்.
இதே அளவான இன்னொரு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் முயற்சியில், சீனாவும் நேபாளத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.