நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுத் துறைகளில், இணைச் செயலர், இயக்குநர்கள், துணைச் செயலர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்ய, மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது.
இதனால், இடஒதுக்கீடு பறிக்கப்படுவதாக, காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்தியா கூட்டணிக் கட்சியினர், காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனதா(ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.