நேருவை பாஜக விமர்சிப்பது ஏன்? – சோனியா காந்தி சொல்லும் காரணம்|Sonia Gandhi criticizes BJP for Villify Nehru

Spread the love

ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முதல் பாகிஸ்தான் பிரிவினை வரை பாஜக குற்றம் சாட்டி வருவது இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை தான்.

இதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தாலும், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர்‌ சோனியா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

நேற்று டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நேரு மையத்திற்கான திறப்பு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் சோனியா காந்தி

நிகழ்ச்சியில் சோனியா காந்தி

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, “பாஜக தொடர்ந்து நேருவை வில்லனாக சித்தரிப்பது அவரது ஆளுமையை மங்க வைப்பதற்கு மட்டுமல்ல. இந்திய சுதந்திரத்தில் அவருக்கு இருக்கும் பங்கையும், சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் அவருடைய தலைமையையும் உலக அளவில் மங்க வைப்பதற்கும் ஆகும். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

நேருவை வில்லனாக்கும் திட்டம் தான் இன்றைய அரசாங்கத்தின் முக்கிய கொள்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அவர்களது லட்சியம் என்பது நேருவின் புகழை அழிப்பது மட்டுமல்ல. நமது இந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளை அழிக்க பார்க்கிறது” என்று பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *