நிரப்பிய விருப்ப மனுக்களை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் விருப்ப மனுக்களை சமர்பித்திருந்தனர்.
இடையில் ஒரு நாள் வீடியோ கால் மூலம் மா.செக்கள் கூட்டத்தை நடத்திய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், “இத்தனை பேருக்கும் நேர்காணல் நடத்தி வேட்பாளரை அறிவிப்பது பெரும் சவாலாக இருக்கும். அதனால் தொகுதிக்கு 2-3 பேரின் பெயரை நீங்களே டிக் அடித்து கொடுங்கள். அவர்களை மட்டும் பரிசீலிக்கலாம்’ என்றார்.
அதன்படி மா.செக்களும் ஒரு விருப்பப்பட்டியலை தலைமைக்கு கொடுத்திருந்தனர். வேட்பாளர் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்கிற தகவலும் கட்சிக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால், திடீரென கடந்த இரண்டு நாட்களாக கட்சிக்குள் புதிய தகவல் ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது. அதாவது, ‘முதற்கட்டமாக 80 வேட்பாளர்களை விஜய் டிக் அடித்து முடிக்க, பட்டியலும் ரெடியாகிவிட்டது. பிப்ரவரி 28 ஆம் தேதி தலைவரே முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பை வெளியிடப்போகிறார். அதைத் தொடர்ந்து மார்ச் இரண்டாம் வாரத்துக்குள் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி பிரமாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தவிருக்கிறார்’ கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றனர்.