தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலைப் போன்ற நேர்மையான தலைவரைச் சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆத் ஆத்மி தெரிவித்துள்ளது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசினார்.
கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கு உச்ச நீதிமன்ற உத்தரவு கட்சிக்கும், அதன் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்குப் பெரிய நிவாரணம்.
கேஜரிவாக்கு ஜாமீன் வழங்கியது விவகாரம் மட்டுமல்ல, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அதன் சர்வாதிகாரத்தை நிறுத்த நீதிமன்றம் அளித்த பெரிய பாடம் என்றும் அவர் கூறினார்.