கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமனாரும் கைதாகியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே வழக்கில் கைதான இளம்பெண்ணின் கணவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நிக்கி – விபின் திருமணம் 2016ஆம் ஆண்டு நடந்த நிலையில், அதே நாளில் விபினின் மற்றொரு சகோதரர் ரோஹித்துக்கும் நிக்கியின் சகோதரி காஞ்சனுக்கும் திருமணம் நடந்துள்ளது.
சகோதரிகள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், நிக்கியிடம் ரூ.36 லட்சம் கேட்டு கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்த நிலையில், தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் நடந்தேறியிருக்கிறது.