நொய்டா: கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், மகன் பலி

dinamani2F2025 05 252Fu29vs3qf2FANI 20250525113559
Spread the love

நொய்டாவில் கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், அவரது 12 வயது மகன் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் உள்ள கட்டடத்தின் 13வது மாடியில் வசித்து வருபவர் சாக்ஷி சாவ்லா (38). அவருடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தக்ஷ்(12).

இந்தநிலையில் தக்ஷ் சனிக்கிழமை காலை தனது பிளாட்டின் பால்கனியில் இருந்து கீழே குதிக்க வேகமாக ஓடியுள்ளான். மகனைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது தாயார் சாக்ஷி சாவ்லாவும் ஓடியிருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியைக் கண்டித்து போராட்டம்: உத்தவ் தாக்கரே

ஆனால் இருவரும் பால்கனியில் இருந்து விழுந்து இறந்தனர் என்று போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் கூறினார். சம்பவம் நடந்த நேரத்தில், தர்பன் சாவ்லா வீட்டின் மற்றொரு அறையில் இருந்திருக்கிறார்.

போலீஸார் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

A 12-year-old child and his mother died on Saturday after falling from the 13th floor of a building in Uttar Pradesh’s Gautam Buddha Nagar, police said.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *