இந்தியில் நீங்கள் உள்ளீடு செய்யும் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவை ஏற்கனவே நீங்கள் ‘சர்வீஸ் பிளஸ்’ (Service Plus) அல்லது நோட்டரி ஆன்லைன் போர்ட்டலில் ஆங்கிலத்தில் கொடுத்த விவரங்களுடன் சரியாக ஒத்துப்போக வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் (Mis-match) இருந்தால், உங்கள் விண்ணப்பம் குறைபாடுள்ள ஒன்றாகக் கருதப்படும்.
நீங்கள் வழங்கும் இந்த விவரங்கள் தானாகவே கணினியால் எடுக்கப்பட்டு, உங்கள் ‘தொழில்முறை சான்றிதழில்’ (Certificate of Practice) அச்சிடப்படும். எனவே, இரண்டு மொழிகளிலும் உள்ள விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தப் போர்ட்டலில் இந்தி பேசும் மாநிலம் அல்லாத ஒருவர் பதிவு செய்கிறார் என்றால், அவர் தன் பெயர் முதல் முகவரி வரை கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் இந்தி மொழி தெரிந்தவரின் உதவி தேவைப்படும் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.
3. மாநிலத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்பதால், மற்ற தகவல்களைப் பூர்த்தி செய்து சமர்பித்தாலும், மாநிலம் தேர்வு செய்யவில்லை என்பதால் விண்ணப்பத்தைச் சமர்பிக்க முடியவில்லை.
சுமார் 3600-க்கும் மேற்பட்ட, நோட்டரிக்காகப் பதிவு செய்த வழக்கறிஞர்கள் இந்தச் சிக்கல்களால் சிரமப்படுவதாகத் தெரியவருகிறது.
எனவே, விண்ணப்பதாரர்களின் காலக்கெடு முடிவதற்குள் இந்தக் கோளாறுகளைச் சரிசெய்து, தென்மாநில வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை உறுதி செய்ய மத்திய சட்ட அமைச்சகம் முன்வருமா?