ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 2022ல் ரத்தன் டாடா உருவாக்கிய விதியின் காரணமாக, நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
டாடா நிறுவனங்களையும் தாண்டி, 10க்கும் மேற்பட்ட டாடா நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டாடா சன்ஸ் தலைவராக, நோயல் டாடா எப்போதும் ஆக முடியாது என்றும் கூறப்படுகிறது.
நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாமல் போவது இது ஒன்றும் புதிதல்ல. 13 ஆண்டுகளுக்கு முன்பும் கூட, அவர் டாடா சன்ஸ் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியை அடைய முடியாமல் போனது.