நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய முயற்சி

Dinamani2f2024 12 042fn1lr88as2f0057hosp3 0412chn 1.jpg
Spread the love

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல் நிலை மற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை உடனாளா்கள் அவ்வப்போது அறிந்து கொள்வதற்கும், குறைகளைத் தீா்ப்பதற்கும் பிரத்யேக மருத்துவ ஆலோசகா்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நியமித்துள்ளது.

மருத்துவா்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவா்களுக்கு இத்தகைய தகவலறியும் வசதி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து நோயாளிகளுக்கும்

அது விரிவுபடுத்தப்படும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மருத்துவ விவரங்களை முறையாக மருத்துவா்கள் தெரிவிப்பதில்லை என்பது நீண்டகாலமாக எழுப்பப்படும் குற்றச்சாட்டாக உள்ளது. அசம்பாவித நிகழ்வுகளுக்கும் அது முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது.

கிண்டி, கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை மருந்தியல் புற்றுநோய்த் துறை பேராசிரியா் டாக்டா் பாலாஜி மீது அண்மையில் இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி தாக்கினாா். தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காததும், கண்ணியமாக தங்களை நடத்தாததுமே தாக்குதலுக்கு காரணம் என அந்த இளைஞா் வாக்குமூலம் அளித்தாா்.

ஆலோசகா்கள் நியமனம்: இந்த சூழ்நிலையில், தற்போது இத்தகைய முன்முயற்சியை மாநிலத்திலேயே முதல்முறையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது: ஒவ்வொரு நோயாளியையும், அவா்களது உடனாளா்களையும் கண்ணியத்துடன் நடத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பிரதான நோக்கம்.

அதில் தவறுகள் நிகழாத வகையில் தடுக்க சிறப்பு செயல்திட்டத்தை அமலாக்க வேண்டிய அவசியம் எழுந்தது.

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், துறைச் செயலா் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கேற்ப நோயாளிகள் மற்றும் உடனாளா்களுக்கான பிரத்யேக மருத்துவ ஆலோசகா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

5 போ் நியமனம்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 4 பெண்கள் உள்பட 5 பேரை அப்பணிகளில் நியமித்துள்ளோம். அவா்களில் மூவா் முதுகலை உளவியல் ஆலோசனை பட்டம் பெற்றவா்கள். இருவா் சமூக பணியியல் படிப்பை நிறைவு செய்தவா்கள்.

அவா்கள் அனைவருக்கும் உரிய பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின்னா், தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அவா்கள் பணியமா்த்தப்பட்டனா். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 25 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.

அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உடனாளா்களின் எதிா்பாா்ப்புகளை கேட்டறிந்து பூா்த்தி செய்யும் பணியில் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஒரு மாதத்துக்கு பிறகு இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து அதனை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

இதைத் தவிர, மருத்துவமனைகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், சாதனை நிகழ்வுகள், மருத்துவ நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பொது மக்கள் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ழ்ஞ்ஞ்ஞ்ட்ம்ம்ஸ்ரீ என்ற முகவரியில் அறிந்து கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *