நோய்களை நீக்கி அருளும் தோரணமலையில் ஶ்ரீகார்த்திகேயா சுப்ரமணிய ஹோமம்; நீங்களும் சங்கல்பிக்கலாம்!

Spread the love

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது தோரணமலை. இங்குள்ள முருகப்பெருமான் ஆலயம் நாடி வருபவர்களுக்கு நல்லருளும் ஆரோக்கியமும் அருளும் தலமாக உள்ளது.

வானிலிருந்து பார்க்க வாரணம் (யானை) போன்ற அமைப்பில் அமைந்துள்ள இந்த மலையை, ‘வாரணமலை’ என்றும், பொதிகை மலைகளின் தோரண வாயிலாக அமைந்து உள்ளதால், ‘தோரண மலை’ என்றும் அழைக்கிறார்கள்.

அகத்தியர் இங்கு வாசம் செய்து பல பல மருந்துகளைக் கண்டறியக் காரணமாக இருந்த தலம் என்பதால் இது நோய்கள் நீக்கும் தலமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமே அனைவருக்கும் ஞானமும் அருள்பவன் தோரணமலை முருகன் எனவே இதற்குப், ‘பூரண மலை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தோரணமலை
தோரணமலை

சிவ – சக்தி ஐக்கியமான திருமண வைபவத்தின்போது தென்பகுதியைச் சரிசெய்ய, தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் மகத்துவத்தை உணர்ந்து இங்கேயே தங்கிவிட்டார்.

இங்கு முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கிப் பல சீடர்களை உருவாக்கினார். அவர்களில் ஒருவரே தேரையர். இன்றும் அரூப வடிவில் சித்தர்கள் உலாவும் இந்த மலையின் மகத்துவம் மிகவும் பெரிது. ஒருமுறை இத்தலத்துக்கு வந்து வழிபட்டுவிட்டால் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் என்பதை பக்தர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ராமபிரான் வழிபட்ட முருகன் தோரணமலையான் என்கின்றன புராணங்கள். மகாகவி பாரதியும் இத்தலத்தைப் போற்றியுள்ளார். 64 புனித சுனைகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளும் கொண்ட எழில் வாய்ந்த மலை இது.

மலைக்குமேல் முருகன் குகைக் கோயில் அழகனாய் அருள்பாலிக்கிறான் முருகன். அடிவாரத்தில் உற்சவரைத் தரிசிக்கலாம். மட்டுமன்றி வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, குருபகவான், மகாலட்சுமி, சரஸ்வதி, சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகியோர் சந்நிதிகளும் அடிவாரத்தில் உள்ளன.

இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய தோரணமலையில் தைப்பூசத் திருவிழா களைகட்டும். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு வந்து மலைமேல் அருளும் முருகப்பெருமானைத் தரிசனம் செய்து செல்வார்கள்.

அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம். உலகில் முதன்முதலில் நீர் தோன்றியது தைப்பூச நாளிலே என்பார்கள். எனவே, சிவாலயங்கள், முருகப்பெருமான் திருக்கோயில்களில் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

இப்படி மக்கள் கூடி மகிழும் இந்த அற்புதத் திருநாளில் சக்தி விகடன் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிரவாகத்துடன் இணைந்து ஸ்ரீ கார்த்திகேயா சுப்ரமண்ய ஹோமத்தை நடத்திருக்கிறோம். வேத விற்பனர்களைக் கொண்டும் முருகன் அடியார்களைக் கொண்டும் உயரிய திரவியங்கள் சேர்த்துச் செய்யப்படும் இந்த ஹோமத்தில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பான ஒன்று.

இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் தீராத நோய்கள் தீரும், தோஷம் நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும்.

உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்தச் சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள். நம் மனதில் எண்ணங்களை ஈடேற்றித் தரும் இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக்கொண்டால் சகல நலன்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு 2026 பிப்ரவரி 1-ம் நாள் தைப்பூசம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தோரணமலையில் அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ கார்த்திகேயா சுப்ரமண்ய ஹோமம் நடைபெற இருக்கிறது. மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம் வைபவங்களும் நடைபெற இருக்கிறது. நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் உண்டு.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

காரியத் தடைகள் நீங்கி வாழ்வில் சுபிட்சம் அளிக்கும் கார்த்திகேயா சுப்ரமண்ய ஹோமத்தில் கலந்துகொள்வது மிகவும் பாக்கியம்.

ஹோமம்
சுதர்சன ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்தப் பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் நிகழவுள்ளன.

ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *