'நோ' Money, 'நோ' UPI: இனி Fastag தான் நெடுஞ்சாலைகளில் கட்டாயம்; 10-ம் தேதிக்கு மேல் இதை மீறினால்?

Spread the love

நெடுஞ்சாலைகளில் டோல் கேட்கள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், இன்னும் பலரிடம் ஃபாஸ்ட் டேக் இருப்பதில்லை. அதனால், அவர்கள் டோல் கேட்டுகளில் பணமாகவும், யு.பி.ஐ-யிலும் பேமென்ட் செய்து வருகின்றன.

இனி இந்த ஆப்ஷன் இல்லை என்கிற நடைமுறையை நெடுஞ்சாலைத் துறை கடுமையாக அமல்படுத்த உள்ளது.

வரும் 10-ம் தேதி முதல், டோல் கேட்டுகளில் பணம் வாங்கப்படாது. அதற்குப் பதிலாக, ஃபாஸ்ட் டேக் மற்றும் யு.பி.ஐயில் தான் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஃபாஸ்ட் டேக்
ஃபாஸ்ட் டேக்

‘அது தான் யு.பி.ஐ பணம் செலுத்தலாமே’ என்று அசால்டாக நினைக்காதீர்கள். ஃபாஸ்ட் டேக் இல்லாமல், யு.பி.ஐயில் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட, 25 சதவிகித அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

இது வருகிற ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை அரசு அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தங்களது ஐ.டி கார்டுகளைக் காட்டி, டோல்களில் பணம் செலுத்தாமல் சென்றுக்கொண்டிருந்தனர்.

ஆனால், இனி அந்த நடைமுறையும் இல்லை.

அரசு வாகனங்களுக்கு மட்டுமே ஃபாஸ்ட் டேக் இல்லாமல் போகும் அதிகாரம் இனி உண்டு.

அதனால், இனி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது, ஃபாஸ்ட் டேக் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *