திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா.
சமீபத்தில் இவருக்கும் பிஜு ஜனதா தளக் கட்சி முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவுக்கு திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:
எனக்கு பங்கஜ் திரிபாதி மீது க்ரஷ்
முன்னாபய்யா இணையத் தொடரை நான் பார்த்துள்ளேன். அதை மீண்டும் பார்ப்பேன். விக்கே டோனர் பார்த்திருக்கிறேன். அந்தப் படமும் பிடிக்கும்.
எனக்கு பங்கஜ் திரிபாதி மிகவும் பிடிக்கும். அவரது மிர்ஜபூர் தொடரை முழுவதுமாகப் பார்த்துள்ளேன். அவருக்கு நான் வாய்ஸ் – நோட்ஸ் (குரல் பதிவு) அனுப்பியிருந்தேன். ஆனால், அவர் அதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
எனக்கு பங்கஜ் திரிபாதி மீது க்ரஷ். அவர் மிகவும் கூலான ஒரு நடிகர் என நினைக்கிறேன். அவர் வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூரைவிட மிர்ஜாபூரில் அதிகமாக பிடிக்கும்.
குரல் பதிவுக்குப் பதிலளிக்காத பங்கஜ்
அவருக்கு அனுப்பிய குரல் பதிவில் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. உங்களுடன் ஒரு காஃபி குடிக்க வேண்டுமென எழுதினேன். அவர் அலிபாவில் வசிக்கிறார். யாருடனும் காஃபி குடிக்க செல்வதில்லை.
ஒருமுறை எம்பியும் நடிகருமான ரவி கிஷன் பங்கஜிடன் போன் செய்து கொடுத்தார். என்னால் சரியாக பேச முடியவில்லை. அவருக்கு அளித்த வாய்ஸ் – நோட்ஸ் (குரல் பதிவு) குறித்தும் மறந்துவிட்டேன் எனக் கூறினார்.
ஏற்கெனவே, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார்.
பின்னர் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவருடன் 3 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.