பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பின்னர்வெளியான கருத்து கணிப்பின் போது பா.ஜனதா கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
பங்குச்சந்தையில் பெரும் சரிவு
இதன்பின்னர் 4 ந்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது கருத்து கணிப்புகளை பொய்யாக்கி காங்கிஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பா.ஜனதா கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சிஅமைக்க உள்ளது. பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி 3-வது முறையாக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே பா.ஜனதா கட்சிக்கு அதிபெரும்பான்மை கிடைக்க வில்லை என்பதால் வாக்கு எண்ணிக்கை நாளன்று பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சுமார் ரூ.38 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை
இந்த நிலையில் கருத்துகணிப்பின் போது பங்கச்சந்தையில் திடீர் உயர்வும், வாக்குஎண்ணிக்கையின் போது சரிவும் ஏற்பட்டு இருப்பதற்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் மீதுநாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி இன்று(6ந்தேதி) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கோடி குடும்பங்களுக்கு குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனை ஏன் வழங்கினர்? பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனை வழங்குவது அவர்களின் வேலையா?.
அவர்கள் இருவரும் ஒரே செய்தி ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தது ஏன்? அந்த செய்தி ஊடகம் செபியால் பங்குச் சந்தையில் மோசடி செய்யப்பட்டதாக விசாரிக்கப்படும் அதே தொழில் குழுமத்தைச் சேர்ந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு என்ன தொடர்பு
மேலும் பாஜகவுக்கும் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு வெளியிட்ட நிறுவனங்களுக்கும் சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படியுங்கள்: சர்வாதிகார ஆட்சிக்கு கடிவாளம் போட்டுள்ள வெற்றி-மு.க.ஸ்டாலின்