1. பயத்தில் பங்குகளை விற்று விடாதீர்கள். பங்குச்சந்தையில் ஏற்ற தாழ்வுகள் சாதாரணமான ஒன்று. அதனால், இப்போது சந்தை இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள்.
2. சந்தை எப்படி இருக்கிறது என்று அடிக்கடி உங்கள் ஃபோர்ட்போலியோவை செக் செய்து கொண்டே இருக்காதீர்கள். இது உங்களுக்கு தேவையில்லாத அழுத்தத்தைத் தான் தரும்.
3. உங்கள் பணத்தை ஒரே துறை… ஒரே பங்கில் முதலீடு செய்யாமல், தங்கம், இக்விட்டி, கடன் பத்திரங்கள் வெவ்வேறு துறை பங்குகள் என பிரித்து முதலீடு செய்யுங்கள் (Diversification).

4. பங்குச்சந்தை சரிவில் இருக்கும்போது, தரமான நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறைவாக இருக்கலாம். அதனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்தப் பங்குகளை வாங்கிப் போடுங்கள்.
5. எஸ்.ஐ.பி கட்டி வந்தால், அதை நிறுத்திவிடாதீர்கள். மீண்டும்… மீண்டும் சொல்கிறோம்… – மாற்றம் ஒன்றே மாறாதது.
6. கடைசியாக… ஆனால், முக்கியமாக, உங்கள் போர்ட்ஃபோலியோவை ஒருமுறைக்கும், இருமுறைச் சோதித்து பார்த்து முடிவு எடுங்கள்.
குறிப்பு: பங்குகள், முதலீடுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், பங்குச்சந்தை நிபுணர்கள், பொருளாதார நிபுணர்களிடம் உடனே பேசி தெளிவு பெறுங்கள்.