2016-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும், இந்திய சந்தை ஏற்றத்திலேயே இருந்து வந்தது. உலக நாடுகளின் சந்தைகள் கூட, இப்படி தொடர்ந்து 10 ஆண்டுகள் பாசிட்டிவானதாக இல்லை.
அதனால், தொடர்ந்து 10 ஆண்டுகள் ஏற்றத்தில் இருப்பதால், நிறுவனங்களின் வேல்யூயேஷன்கள் மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், சந்தையில் ஒரு கரெக்ஷன் வருவது இயல்பு தானே. இது 3 – 4 ஆண்டுகள் கூட நடக்கலாம்.

நான் பங்குச்சந்தைக்கு வந்து கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதிலிருந்து 1988, 1990, 1993, 1998, 2000, 2003, 2004, 2008, 2013 என அவ்வப்போது கரெக்ஷன்கள் நடந்துகொண்டே தான் இருந்தன.
ஆனால், இது தான் முதல்முறையாக, 10 ஆண்டுகளாக, சந்தை எந்தக் கரெக்ஷனும் இல்லாமல் இருந்தது.
அது இன்னமும் தொடர்ந்திருந்தால் ஆபத்து தான்.
அதனால், இப்போது சந்தை கரெக்ஷனை சந்திப்பது சரியானது.