
இந்த நிலையில், இனி பங்குச் சந்தை மேல்நோக்கிச் செல்லுமா அல்லது இறங்குமா, பங்குச் சந்தையில் இன்றுள்ள வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்துத்தான் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தற்போது தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். காரணம், பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து,
பங்குகளை வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களாக இருந்தாலும், சந்தையின் போக்கைப் பார்த்துத்தான் மேற்கொண்டு அதிகமாக முதலீடு செய்வதற்கும் அல்லது சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், பங்குச் சந்தையானது ஒரே மாதிரி மேல்நோக்கி மட்டும் அல்லது கீழ்நோக்கி மட்டும் செல்வதில்லை. நாம் எதிர்பார்க்காத காரணங்களால்கூட நிஃப்டி குறியீட்டு எண் 100, 200 புள்ளிகள் என்று விழத்தான் செய்கின்றன. சந்தை இன்னும் இறங்குமோ என்று கவலையுடன் உட்கார்ந்திருக்கிற நிலையில், சர்ரென்று ஏறத் தொடங்கி, நமக்கு ஆச்சரியத்தைத் தந்துவிடுகிறது.