பங்குச் சந்தை இறக்கம்… இப்போது என்ன செய்ய வேண்டும்? – சுனில் சுப்பிரமணியம் காட்டும் வழி!

Spread the love

பொதுவாக, ஒரே சொத்தில் நம்முடைய அனைத்துப் பணத்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது. எந்தச் சொத்து எப்போது எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்று சொல்ல முடியாது. நம்முடைய முதலீட்டை பங்குச் சந்தை, தங்கம் மற்றும் வெள்ளி, கடன் சந்தை எனப் பிரித்து முதலீடு செய்வதால், நம்முடைய நஷ்டத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும். பங்குச் சந்தையில் மட்டுமே நீங்கள் முதலீடு செய்திருந்தாலும், நீங்கள் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கிற்கு ஏற்ப லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஆகிய ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது அவசியம்” என்று சுனில் சுப்பிரமணியம் சொன்னார்.

கொசுறு செய்தி: பங்குச் சந்தையின் செயல்பாடுகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு எளிய தமிழில் எடுத்துச் சொல்லும்படி தினமும் வீடியோக்களை வெளியிடுகிறார் சுனில் சுப்பிரமணியம். Accidental Investor Prince என்கிற தலைப்பில் யுடியூப் சேனலை நடத்திவரும், பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பற்றி நீண்ட மற்றும் சுருக்கமான (Long & Shorts) வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். லிங்க்ட்இன் வலைதளத்தில் Sense and Simplicity என்கிற பெயரில் பங்குச் சந்தை தொடர்பான தனது கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இந்த யூடியூபையும், லிங்க்ட்இன் வலைதளத்தையும் தொடர்ந்து ஃபாலோ செய்து படிப்பதன் மூலம் சரியான முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *