`வள்ளலார் மூட்டிய நெருப்பு மதங்களைக் கடந்து எரியும்..!’
ஆரம்பத்தில் நண்பர் சிவபெருமாள் சொன்னதைப் போல கஷ்டத்தில் இருந்து மீண்டும் விட்டேன். அப்போது சபையில் இருந்து, `நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க ?’ என்று என்னைக் கேட்டபோது, நான் காய்கறி வியாபாரம் செய்வதாகச் சொன்னேன்.
அதற்கு, `ஐந்து வருஷத்துக்கு தேவையான அரிசி எங்ககிட்ட இருக்குது. அதனால நீங்க காய்கறியை கொடுங்க. மகிழ்ச்சியா ஏத்துக்குவோம்’ என்று கேட்டனர். அதையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக காய்கறிகளை அனுப்பி வந்தேன்.
கடந்த ஆண்டு 25 டன் காய்கறிகளை அனுப்பினேன். என்னைப் போல பலரும் தைப்பூசத்திற்கு காய்கறிகளைக் குவித்ததால், இந்த ஆண்டு காய்கறிகளைக் குறைவாக கொடுங்கள் என்று சபையில் கூறினார்கள்.

அதனால் இந்த ஆண்டு 18 டன் காய்கறிகள், 100 மூட்டை அரிசி, 7,000 தண்ணீர் பாட்டில்கள், மளிகைப் பொருட்களை அனுப்பினேன். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கருத்து சாதாரணமானது கிடையாது.
பசியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். பசிக்கு சாதியோ மதமோ தெரியாது. வள்ளலாரின் சிந்தனைக்கும், இந்த சமூகத்திற்கு அவர் காட்டிய வழிக்கும் முன்னால், நான் செய்வது ஒன்றுமே கிடையாது.
வள்ளலாரின் பக்தர்கள் நாடு முழுவதும், நாடு கடந்தும் அன்றாடம் லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி வருகிறார்கள். அந்த வகையில் வள்ளலார் மூட்டிய நெருப்பு, மதங்களைக் கடந்து இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் எரியும்” என்று நெகிழ்கிறார்.