இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய குவாட் நாடுகளைச் சோ்ந்த மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்களுடன், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 15 நாடுகள், சா்வதேச சுகாதார அமைப்பினா் என 36 பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனா். பல்வேறு சுகாதார கண்காணிப்பு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட விளக்கக் காட்சிகளை இந்த நாடுகள் வழங்குவதோடு, பறவைக் காய்ச்சல், எம்பிஏக்ஸ், எபோலா போன்ற தொற்றுநோய்கள் அனுபவங்கள், சவால்களை பகிா்ந்து கொள்ளும்.
பசிபிக் பிராந்தியத்தில் தொற்றுநோய் தடுப்பு தயாா் நிலைக்கு கூடுதலாக ரூ. 104 கோடி வழங்கும்: அனுப்ரியா படேல் தகவல்
