பசுக்களுக்கு ‘ஜாஸ்’ மியூசிக் இவ்வளவு பிடிக்குமா? வியக்க வைக்கும் ஆய்வு முடிவு! | cows like jazz music so much

Spread the love

மனிதர்களுக்குத் தான் இசை ரசனை இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கும் இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக “ஜாஸ்’ (Jazz) போன்ற மென்மையான இசை வடிவங்களை பசுக்கள் விரும்பி ரசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது கேட்பதற்கு ஏதோ கார்ட்டூன் கதை போலத் தோன்றினாலும், இதன் பின்னணியில் அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அது என்ன என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

கறவை மாடுகள் மற்றும் கால்நடைகளின் மனநிலை, நடத்தை மற்றும் உற்பத்தித்திறனை இசை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விலங்கு நல நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பசுக்கள் மனிதர்களைப் போல இசையை ரசிக்கின்றனவா என்று கேட்டால், இல்லை என்றும், மாறாக அவை குறிப்பிட்ட வகையான சத்தங்கள் மற்றும் ரிதங்களால் அமைதிப்படுத்தப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

‘அனிமல்ஸ்’ (Animals) என்ற இதழில் வெளியான ஒரு ஆய்வின்படி, அமைதியான மற்றும் மெதுவான தாளம் கொண்ட இசை, கால்நடைகளின் இதயத் துடிப்பைக் குறைக்கவும், அவற்றின் பதற்றத்தைத் தணிக்கவும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

பசுக்கள் அமைதியாக இருக்கும்போது அவற்றின் பால் உற்பத்தி மற்றும் உடல்நலம் சீராக இருப்பதாகவும், இதனால் மென்மையான இசை, குறிப்பாக ஜாஸ் இசை, இந்த விஷயத்தில் முக்கிய இடம் பிடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பால் பண்ணை விவசாயிகள், பால் கறக்கும் நேரங்களில் மென்மையான இசையை இசைக்க விடுவது வழக்கம். அத்தகைய நேரங்களில் பசுக்கள் மிகவும் ஒத்துழைப்புடன் இருப்பதாகவும், பதற்றமில்லாமல் அமைதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *