பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்று 3வது காலாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது.
நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.548.02 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.436.97 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 25 சதவிகிதம் அதிகமாகும்.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வருவாயும் 26 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,448.86 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,946.18 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 25 சதவிகிதம் அதிகரித்து ரூ.806 கோடியாக இருந்தது.