பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது | Flood at Panchalinga Falls

1380333
Spread the love

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் குளிக்க தடை​வி​திக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், நேற்று முன் தினம் இரவு பஞ்​சலிங்க அரு​வி​யில் தண்​ணீர் ஆர்ப்​பரித்து கொட்​டியது. தோணி ஆற்​றின் வழி​யாக ஏற்​பட்ட காட்​டாற்று வெள்​ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்​றபடி, ஆற்​றங்​கரை​யில் அமைந்​துள்ள அமணலிங்​கேஸ்​வரர் கோயிலை சூழ்ந்​தது. சுமார் 20 அடி உயர​முள்ள கோயி​லின் பெரும்​பகு​தியை மூழ்​கடித்​து, வெள்​ளம் பாய்ந்​தோடியது.

தற்காலிக கடைகள்… அதே​போல, அருவிக்​குச் செல்​லும் பாதை அரு​கில் மலை​வாழ் மக்​கள் அமைத்​திருந்த தற்​காலிகக் கடைகளை​யும் வெள்​ளம் அடித்​துச் சென்​றது.

இதுகுறித்து கோயில் அதி​காரி​கள் கூறும்​போது, “நள்​ளிர​வில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​ட​தால் எவ்​வித பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கோயில் உண்​டியல்​கள் மூடப்​பட்​டன.

அதி​காலை 2.30 மணிக்கு பின்​னர் வெள்​ளம் வடிந்​தது. பின்​னர் கோயில் வளாகத்​தில் தேங்​கி​யிருந்த செடி, குப்​பையை அகற்​றும் பணி​யில் ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். சுவாமி வழி​பாட்​டுக்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை.

அருவிக்கு செல்ல ஏற்​கெனவே விதிக்​கப்​பட்ட தடை​யும் நீட்​டிக்​கப்​பட்​டது” என்​றனர். பஞ்​சலிங்க அரு​வி​யில் ஏற்​பட்ட வெள்​ளம் காரண​மாக திரு​மூர்த்தி அணைக்கு வரும் நீரின் அளவு அதி​கரித்​தது. பாலாற்​றில் விநாடிக்கு 1,500 கனஅடி​யும், காண்​டூர் கால்​வா​யில் விநாடிக்கு 871 கனஅடி​யும் நீர்​வரத்து இருந்​தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *