தொடர்ந்து அதே நாளில் மற்றொரு டிரோன் ஒன்றும் மஹாவா கிராம அருகே ரோந்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டது.
இரண்டு டிரோன்களும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப எதிர் நடவடிக்கைகளால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஊகிக்கப்படுவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
பஞ்சாப் எல்லையில் வெளிநாட்டு டிரோன்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.