பஞ்சாப் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார் மணீஷ் சிசோடியா!

dinamani2F2025 09 062F4oiofuog2Fmanish
Spread the love

ஆத் ஆம் கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

முதல்வர் பகவந்த் மான்(51) சோர்வு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் பகவந்த் மான் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று நாள்களாக முதல்வர் பகவந்த் மான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாக சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, அவர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை, அவரது நாடித்துடிப்பு குறைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்றும், அவரது நிலைமை தற்போது சீராக இருப்பதாகவும், கவலைப்பட அவசியமில்லை. மருத்துவர்கள் கூற்றுப்படி அவர் ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று அவர் கூறினார்.

முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபில் வெள்ள நிலைமை குறித்து சிசோடியாவிடம் கேட்டறிந்தார். வெள்ளிக்கிழமை, முதல்வர் தலைமையில் நடைபெறவிருந்த பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

AAP leader Manish Sisodia on Saturday met Punjab Chief Minister Bhagwant Mann at a private hospital in Mohali and enquired about his health.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *