“பஞ்சாயத்து ஓவர்” விசிகவுக்கு 8 தொகுதி ஒதுக்கீடு: பானை சின்னத்தில் போட்டி  – Kumudam

Spread the love

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளில் பெரும்பாலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. விடு தலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வருகிறது.ஆனால், தி.மு.க. தரப்பில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால், தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.

இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதியில் நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தேர்தல் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரித் தல், வேட்பாளர்களை தேர்வு செய்தல், தி.மு.க.விடம் வெற்றி வாய்ப் புள்ள தொகுதிகளை கேட்டுப்பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் தி.மு.க. கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் 2028-ல் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடமும் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சென்னை சித்தரஞ்சாலை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் அறிவாலயத்திற்கு ஸ்டாலின் கிளம்பி சென்றார். 

இதை தொடர்ந்து திருமாவளவனும் அறிவாலயம் வருகை தந்தார். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மொத்தம் 8 (எட்டு) சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும்-அவற்றில் 6 தனித் தொகுதிகளிலும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *