பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நகரங்களிலிருந்து சுமார் 16,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு பஞ்சாபில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்ததால், மக்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.