படையப்பா: “அப்பா எழுதிய கதை இப்போதும் புது படம் பார்க்கின்ற மாதிரி இருக்கிறது”- சௌந்தர்யா ரஜினிகாந்த் | the story my father wrote 25 years ago feels like watching a brand-new film,”- Soundarya Rajinikanth

Spread the love

ரஜினியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி “படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

ரீ-ரிலீஸிலும் இப்படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (டிச. 15) ‘படையப்பா’ படத்தை தியேட்டரில் பார்த்தபிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

'படையப்பா '

‘படையப்பா ‘

25 வருடங்களுக்கு பிறகு ‘படையப்பா’ படத்தை மீண்டும் எல்லோரும் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நானும் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தேன். 25 வருடங்களுக்கு முன்பு அப்பா எழுதிய கதை இப்போதும் புதிய படம் பார்க்கும் மாதிரி இருக்கிறது.

டிசம்பர் 12ஆம் தேதியே தியேட்டருக்கு வந்து படம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பாவுடன் திருப்பதிக்கு சென்றதால் அந்த நாள் ரசிகர்களுடன் படம் பார்க்க முடியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *