பட்ஜெட்: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

Dinamani2fimport2f20232f22f12foriginal2fdraupathimurmu.jpg
Spread the love

நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கிறார்.

அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்திக்க சென்றுள்ளனர்.

மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தொடர்ந்து 7ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுகிறார் நிர்மலா சீதாராமன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *