மத்திய பட்ஜெட் என்பதால், நேற்று வழக்கத்திற்கு மாறாக சந்தை இருந்தது.
பட்ஜெட்டில் சந்தைக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் எந்த அறிவிப்பும் இல்லாததால், சந்தை சரிவில் முடிந்தது.
“பொதுவாக பட்ஜெட் சந்தைக்கு “Non – event’. ஆனால், நேற்று பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு ஓரிரு அதிர்ச்சிகள் காத்திருந்தன.
இதனால், சந்தை பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்தது.
ஒன்று, பட்ஜெட்டில் முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு ஊக்கமும் இல்லை.
இரண்டாவது, F&O பிரிவில் பத்திரப் பரிவர்த்தனை வரியைக் (Securities Transaction Tax) கூட்டுகிறார்கள்.
மூன்றாவது, வருமான வரி சலுகைகள் முதல் சந்தைக்கான பல எதிர்பார்ப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இன்னொரு பக்கம், நேற்று நம் நாட்டு சந்தைக்கு மட்டுமே இயங்கியது. இதனால், சந்தைக்கு வேறு எந்த ஊக்கமும் கிடைக்கவில்லை.
ஆக, சந்தை சரிவை சந்தித்தது.
பட்ஜெட் வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, இதுவரை சந்தை இப்படியான ஒரு சரிவைக் கண்டதே இல்லை. இது ‘Worst Budget Day loss’ என்று அழைக்கப்படுகிறது.