பட்ஜெட் 2026: விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?|Budget 2026: Farmers’ Big Demands You Should Know

Spread the love

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு “விவசாயம்’. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.

இந்தப் பட்ஜெட்டிலும் அது இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இளங்கீரன்

இளங்கீரன்

> C+2 என்கிற குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டாயம் வேண்டும். ‘லாபம் இல்லை’ என்று தான் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேறுகின்றனர். இதைத் தடுக்க, குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மிக மிக முக்கியம்.

மேலும், விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டால், விவசாயம் லாபகரமானதாக மாறும்.

> விவசாயத்திற்கு தண்ணீர் மிக மிக முக்கியம். 2014-ம் ஆண்டு ‘நதிகள் இணைக்கப்படும்’ என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. இப்போது மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

ஆனாலும், இன்னும் அவர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் முக்கிய நதிகளையாவது இணைக்க வேண்டும். அப்போது இங்கே மழை பெய்யும்போது, மழை இல்லாத மாநிலத்திற்கு, இங்கிருக்கும் உபரி நீரை திருப்பிவிட்டு, இங்குள்ள பயிர்களைப் பாதுகாக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *