பட்ஜெட் 2026–27: வருமான வரி புதிய சட்டம், TDS, TCS மாற்றங்கள் என்ன?|No Tax on Insurance Claims? Budget 2026–27 Income Tax Shocks

Spread the love

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறித்து வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்புகள்…

> வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

> எளிய வருமான வரி விதிகளும், வருமான வரிப் படிவம் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.

> வாகன விபத்துக் காப்பீட்டிற்குக் கிடைக்கும் இழப்பீட்டிற்கு இனி வருமான வரி கிடையாது.

> திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திருத்தத்திற்குப் பெயரளவே கட்டணம் வசூலிக்கப்படும்.

> வருமான வரி விலக்கு வரம்பில் எந்த மாற்றமும் இல்லை.

> பேமென்ட் பணமாக அல்லாமல் பொருளாகக் கொடுக்கப்பட்டதற்கு, கணக்குப் புத்தகங்கள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் இருப்பது… TDS செலுத்தாதது போன்றவை கிரிமினல் குற்றங்களில் இருந்து விலக்கப்படுகிறது. அதற்கு இனி அபராதம் மட்டுமே.

> வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது இனி 2 சதவிகிதம் TCS கட்டினால் போதும்.

> கல்வி மற்றும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு TCS 2 சதவிகிதம் மட்டுமே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *