பட்ஜெட் 2026: MSME துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன?|MSMEs Want More Than Loans in Budget 2026

Spread the love

இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று – சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை.

“இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது.‌

முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த்

See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த்

2024–25 மற்றும் 2025–26 பட்ஜெட்டுகளில் இந்தத் தொழில்துறையின் வகைப்பாட்டைச் சீரமைத்தல், கடன் கிடைப்பதற்கான சலுகைகளை விரிவாக்குதல், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கான கிரெடிட் கார்டுகள் மற்றும் BharatTradeNet போன்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டன.

இதனால், பணப்புழக்கம் மேம்பட்டாலும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு சரியாக பேமென்ட் கிடைக்காதது போன்ற வர்த்தக அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *