பட்​டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு: ராமதாஸ் அறிவிப்பு | PMK general meeting to be held in Pattanur today as planned

1373302
Spread the love

விழுப்புரம்: குடும்​பத்​துடன் தைலாபுரம் திட்​டத்​துக்கு அன்​புமணி சென்ற நிலை​யில், புதுச்​சேரி அருகே பட்​டானூரில் இன்று திட்​ட​மிட்​டபடி பாமக பொதுக்​குழுக் கூட்​டம் நடை​பெறும் என ராம​தாஸ் அறி​வித்​து்ளார்.

பாமக சட்ட விதி​களின்​படி நிர்​வாகக் குழு, செயற்​குழு மற்​றும் பொதுக்​குழு ஆகியவை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை​யாகும். இவற்றை பாமக தலை​வர் அன்​புமணி நடத்தி முடித்​து​விட்​டார். சென்​னை​யில் கடந்த 9-ம் தேதி நடை​பெற்ற பொதுக்​குழு​வில், தலை​வர் பதவி​யில் அன்​புமணி ஓராண்​டுக்கு தொடர்​வார் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால், அன்​புமணி கூட்​டிய பொதுக்​குழு செல்​லாது என தேர்​தல் ஆணை​யத்​துக்கு நிறு​வனர் ராம​தாஸ் கடிதம் அனுப்​பி​னார்.

இந்​நிலை​யில், நிர்​வாகக் குழு, செயற்​குழு கூட்​டத்​தைத் தொடர்ந்து புதுச்​சேரி அடுத்த பட்​டானூரில் ஆக. 17-ம் தேதி (இன்​று) பாமக பொதுக்​குழு நடை​பெறும் என ராம​தாஸ் அறி​வித்​திருந்​தார். ஏற்​கெனவே நடந்த நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் அன்​புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராம​தாஸுக்கு முழு அதி​காரம் அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதனால், பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அன்​புமணி தொடர்​பாக முக்​கிய முடிவு எடுக்​கப்​படலாம் என்ற எதிர்​பார்ப்பு அதி​கரித்​துள்​ளது.

இதற்​கிடை​யில், ராம​தாஸ் மனைவி சரஸ்​வ​தி​யின் பிறந்​த​நாளை​யொட்டி தைலாபுரம் தோட்​டத்​தில் உள்ள ராம​தாஸ் இல்​லத்​துக்கு அன்​புமணி நேற்று முன்​தினம் இரவு குடும்​பத்​துடன் சென்​றுள்​ளார். அங்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்​டாடப்​பட்​டது. அப்​போது ராம​தாஸும் உடனிருந்​தார். இந்​தப் படம் சமூக வலை​தளங்​களில் வைரலானது. மேலும், ராம​தாஸ் கூட்​டிய பொதுக்​குழு கூட்​டம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல் பரவியது.

இந்​நிலை​யில், பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “எனது தலை​மை​யில் பாமக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டம் இன்று காலை 10 மணி​யள​வில் புதுச்​சேரி அரு​கே​யுள்ள பட்டானூர் சங்​கமித்ரா அரங்​கில் திட்​ட​மிட்​டபடி நடை​பெறும். இதில் எவ்​வித மாற்​ற​மும் இல்​லை. பொதுக்​குழு ரத்து செய்​யப்​படு​வ​தாக சில விஷமிகள் பரப்பி வரும் வதந்​தியை நம்ப வேண்​டாம். பொதுக்​குழு​வில் கலந்​து​கொள்ள வேண்​டிய​வர்​கள், தவறாது கலந்​து​கொள்ள வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *