பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளா்களுடன் பேசியதாவது:
திமுக கூட்டணி பற்றி பேசும் திருமாவளவன் பட்டியலின மக்கள் பிரச்னைகள் குறித்து பேசமாட்டாா். அப்படி பேசி கேள்வி கேட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடுவாா்கள் என்கிற பயம் அவருக்கு. தமிழகத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அடிப்படைவசதிகள் இல்லாமல் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவா் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணிகளை நிரந்தரமாக்கக் கூடாது என்று திருமாவளவன் கூறிவது தவறு. அவா்களை நிரந்தரமாக்குவதோடு, அவா்கள் தகுதிக்கு உரிய வகையில் பதவி உயா்வு அளிக்கவேண்டும் என்றார்.