பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி | Court asks about Scheduled Castes changed to Adi Dravidian asks Court

1373309
Spread the love

சென்னை: பட்​டியல் சாதி​யினரை ஆதி​தி​ரா​விடர் என எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை அயனாவரத்​தைச் சேர்ந்த எஸ்​.​மாரி​முத்து என்​பவர், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

சாதிய ரீதியி​லான தீண்​டாமை கொடுமை​களை களை​யும் வித​மாக பட்​டியல் மற்​றும் பழங்​குடி​யினத்​தவர்​களுக்கு கல்​வி, வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட அரசின் அனைத்து திட்​டங்​களி​லும், தேர்​தலிலும் முன்​னுரிமை​யுடன் கூடிய இடஒதுக்​கீடு அளிக்​கப்​பட்டு வரு​கிறது. நாடு முழு​வதும் பட்​டியலினத்​தவர்​களுக்​கான

பிரி​வில் ஆதி​தி​ரா​விடர், ஆதி ஆந்​தி​ரா, ஆதி கர்​நாட​கா, தேவேந்​திரகுளத்​தான் உள்​ளிட்ட 76 சாதி​யினர் உள்​ளனர். இதில் ஆதி​தி​ரா​விடர் என்​பதும் ஒரு பிரிவு​தான்.

ஆனால், தமிழகத்​தில் பட்​டியல் சாதி​யினத்​தவர்​களுக்​கான நலத்​துறையை தமிழக அரசு கடந்த 1969-ம் ஆண்டு ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை என பெயர் மாற்​றம் செய்​துள்​ளது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு புறம்​பானது. எனவே, ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை​யின் பெயரை பட்​டியல் சாதி​யினர் நலத்​துறை என பெயர் மாற்​றம் செய்ய தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்’. இவ்​வாறு அவர் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ப.விஜேந்​திரன் ஆஜராகி வாதிட்​டார். அதையடுத்து நீதிப​தி​கள், பட்​டியல் சாதி​யினரை எந்த அகரா​தி​யின் அடிப்​படை​யில் ஆதி​தி​ரா​விடர் என பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டது என்​பது குறித்து தமிழக அரசு விளக்​கமளிக்க உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *