பணத்தைப் பல மடங்காக்கும் ‘அஸெட் அலொகேஷன்’ சீக்ரெட்… கற்றுக்கொள்ள வேண்டுமா?

Spread the love

முதலீட்டில் பலரும் பல தவறுகளைச் செய்கிறோம். தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போடுகிறார்கள்,  அதேபோலத்தான் சிலர் ரியல் எஸ்டேட் தாண்டி எந்த முதலீட்டையும் செய்வதில்லை. சிலரோ பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். ஒரே ஒரு சொத்து வகையில் மட்டும் பணத்தைப் போடுவது முதலீட்டுக்கு அதிக ரிஸ்க்கைக் கொண்டுவரும்.

ஏனெனில், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்ற ஒவ்வொரு வகை சொத்துகளும், பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாகச் செயலாற்றுகின்றன. எனவே, ஒரே ஒரு சொத்துப் பிரிவில் மட்டும் பணத்தைப் போட்டால் நம் முதலீடு நஷ்டத்தைத் தர வாய்ப்புள்ளது. 

அஸெட் அலொகேஷன்

அஸெட் அலொகேஷன்

அந்த நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகவே, சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்ற சிறந்த முதலீட்டு உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்துப் பிரிவுகளில் நம்முடைய பணத்தைப் பிரித்து முதலீடு செய்து கலவையான போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதுதான் நம் பணத்தைப் பல மடங்காக்கும் சீக்ரெட்.

அஸெட் அலொகேஷன் எப்படி இருக்க வேண்டும், யார் எந்த சொத்துப் பிரிவில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தர நாணயம் விகடன், இன்டக்ரேட்டட் நிறுவனத்துடன் இணைந்து வரும் டிசம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலொகேஷன்!’ என்ற சிறப்பு நிகழ்ச்சியைத் கல்பாக்கத்தில் நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில், பொருளாதாரம், முதலீடு போன்றவற்றில் நிபுணத்துவமும் அனுபவமும் உள்ள சோம வள்ளியப்பன் சிறப்புரை ஆற்றுகிறார். மேலும், இன்டக்ரேட்டட் நிறுவனத்தின் சார்பாக நிபுணர்கள் எல்.சுதாகர், ஆர்.குருராஜன் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இதில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம்..! குடும்பத்தோடு கலந்துகொண்டு நிதி அறிவையும், லாபகரமான முதலீட்டு வழிகளையும் தெரிந்துகொண்டு பயன் அடையலாம். 

நிகழ்ச்சி நடக்கும் நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் இதோ:

நாள்: டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை. 

நேரம்: காலை 10.30 AM முதல் 12.30 PM வரை 
இடம்: ஸ்டார் மஹால் & ரெசிடன்சி A/c
ECR ரோடு, புதுப்பட்டினம், (VAO அலுவலகம் எதிரில்),
கல்பாக்கம் – 603 102.

அனுமதி இலவசம். அனைவரும் வரலாம்.
பதிவு செய்ய: https://events.vikatan.com/nanayam/integrated-iap-on-ground/

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *