கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கொடப்பள்ளி பகுதியை சேர்ந்த இவர், வாட்டாகுடி பள்ளியில் கடந்த 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டாரத் தலைவராவும் செயல்பட்டு வந்தார்.
இறந்தவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தலைஞாயிறு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் நவ. 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.