பண்டிகை காலத்தை முன்னிட்டு போதிய அளவு மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் உத்தரவு | TASMAC orders adequate stock of liquor ahead of festive season

1379956
Spread the love

சென்னை: பண்​டிகைக்​கால தேவையை பூர்த்தி செய்​யும் வகை​யில் மது​பானங்​களை கையிருப்​பில் வைக்க வேண்​டும் என மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இது குறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்தை பொறுத்​தவரை 4,829 மது​பான கடைகள் இயங்கி வரு​கின்​றன. அதன்​படி, தினசரி விற்​பனை​யில் இருந்து பண்​டிகை நாட்​களில் சற்று கணிச​மாக விற்​பனை ஆதி​கரிக்​கும்.

அந்​தவகை​யில் இந்​தாண்டு வார இறுதி விடு​முறை தினங்​கள் மற்​றும் தீபாவளி பண்​டிகை தொடர்ந்து வரு​வ​தால் மது​பானங்​களை கையிருப்​பில் வைக்​க​வும், சுற்​றுலா தலங்​களில் பயணி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்​ப​தால் கூடு​தல் இருப்பு வைக்க உத்தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் அதி​கப்​படி​யாக விற்​பனை​யாகும் மது​பான வகை​களின் எண்​ணிக்​கையை கணி​கச​மாக உயர்த்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *