Last Updated:
பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் அமித் கத்யால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
பண மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளரான அமித் கத்யால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான அமித் கத்யால், ’ஆங்கிள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம், குருக்ராம் செக்டார் 70ல் சுமார் 14 ஏக்கரில் வீடுகள் கட்டி கொடுப்பதாக விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இங்கு வீடு வாங்குவதற்கு பலரும் பணம் கட்டியுள்ளனர். ஆனால், பணம் கொடுத்த பலருக்கும் வீடு கிடைக்காமல் இருந்துவந்துள்ளது. இது தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அமலாக்கத்துறையும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அமித் கத்யால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 6 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
November 19, 2025 8:53 PM IST
