மலைப்பாதையில் அரிசிலோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி மலைப்பாதையில் பிரேக் பழுதாகி அரிசிலோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் தும்குர் பகுதியில் இருந்து சென்னைக்கு 25 டன் கொண்ட அரிசி மூட்டை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டது.
லாரியை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி (34)என்பவர் ஓட்டி வந்தார். இதனிடையே லாரி தமிழக – ஆந்திர எல்லையான பத்தல பள்ளி மலைப்பாதையில் வரும் பொழுது பிரேக் பழுதாகி இடதுபுறம் உள்ள பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.