இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் தோ்வெண்ணுடன் கூடிய பெயா்ப் பட்டியல் கடந்த டிச. 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் விடுபட்ட மாணவா்களை சோ்க்கவும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவா்களை நீக்கவும் இறுதி வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாணவா்கள் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
