பத்மநாபபுரம்: `தொகுதியை சேர்ந்தவருக்கு சீட் வழங்க வேண்டும்’- திமுக நிர்வாகிகள் கொந்தளிக்க காரணமென்ன?

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிதான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதி. கடந்த 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மனோ தங்கராஜிக்கு எதிராக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொந்தளித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலுவாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொகுதியைச் சேர்ந்தவருக்கே சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க காரணம் குறித்து தி.மு.க திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் நம்மிடம் கூறுகையில், “பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இதற்கு முன்பு தி.மு.க-வைச் சேர்ந்த தியோடர் ரெஜினால்ட், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் போன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ-க்களாக இருந்தனர். அப்போது கட்சி சம்பந்தமாகவும், தொகுதி மக்களின் பிரச்னைக்காகவும் அவர்களை எளிதில் அணுக முடிந்தது.

ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்

ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாலூரைச் சேர்ந்தவர். அவரை மாவட்டச் செயலாளர் ஆக்கவும், எம்.எல்.ஏ ஆக்கவும் உழைத்தவர்கள் நாங்கள். ஆனால், அவர் அமைச்சர் ஆனதும் முகாம் அலுவலகத்தை கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாலூரில் உள்ள அவரது வீட்டுக்கு மாற்றிவிட்டார். பத்மநாபபுரம் தொகுதிக்குள் ஒரு கட்சி அலுவலகம் உள்ளது, அதில் அவரை பார்க்க முடியாது. சென்னை சென்று பார்த்தால் “இங்கு ஏன் வந்தீர்கள், எனக்கு ஆயிரத்தி எட்டு வேலை இருக்கிறது’ என்பார். பத்மநாபபுரம் தொகுதியைத் தாண்டி பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றால் ‘மகனை பார்த்து கோரிக்கையை சொலுங்கள்’ என்பார். மகனை பார்த்து கோரிக்கை வைக்கவா நாங்கள் அவருக்காக தேர்தல் பணி செய்தோம். கட்சி நிர்வாகிகளுக்காகவும் அவர் எதுவும் செய்யவில்லை. பொதுமக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. தொகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால் எளிதில் அணுக முடியும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *