பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' – நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

Spread the love

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல்.

அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

பத்மாவை நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் அவரது ‘ஸ்டைலில்’ பாராட்டியிருக்கிறார். அது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது…

“தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

 பார்த்திபன்
பார்த்திபன்

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலக மகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, ‘உலக அழகி’ என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்…” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

கமென்டிற்கு ‘ரிப்ளை’

இந்தப் பதிவிற்கு கீழ், நெட்டிசன் ஒருவர், “எல்லாரும் கூப்டு மரியாதை செலுத்துறீங்க ஓகே, ஆனா அவங்கள அதே யூனிஃபார்ம்ல எல்லா இடத்துலையும் கூப்டு மரியாதை செலுத்துறீங்களே, அது ஏன்?” என்று கமென்ட் செய்துள்ளார்.

அதற்கு பார்த்திபன், “அது அவங்களா ஆசைப்பட்டு அப்படி வந்தது. அதை அவங்க மரியாதையா பாக்குறாங்க. நாமும் அப்படி பார்ப்போமே!!!” என்று பதிலளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *