தமிழ்நாட்டிலிருந்து மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் இசைத்துறையில், குறிப்பாக மிருதங்கக் கலையில் ஆற்றிய சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் இசை மற்றும் பக்திப் பாடல்களைத் தொடர்ந்து வளர்த்து வரும் திருத்தணி ஓதுவார் சுவாமிநாதனுக்கு ஆன்மீகம் மற்றும் கலைத்துறையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிற்பக் கலையில், குறிப்பாக வெண்கலச் சிற்பங்களை வடித்தெடுத்தலில் சேலம் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டரின் பங்களிப்புக்காகவும், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக் கலையைத் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வரும் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இது தவிர 20 மொழிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் அரிய கையெழுத்துப் பிரதிகளுடன் மிகப்பெரும் தனியார் ‘புஸ்தக மானே’ எனும் நூலகத்தை உருவாக்கிய கர்நாடக மாநில அங்கே கவுடாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தாய்ப்பால் வங்கித் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்திய மும்பை குழந்தை நல மருத்துவர் அர்மிடா பெர்னாண்டஸ் உள்ளிட்ட 45 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.