கிருஷ்ணனின் மனைவி சுசீலாவிடம் நாங்கள் பேசினோம்.
“நாங்க அவர “கிட்னா”னுதா கூப்பிடுவோம். அவருக்கு சின்ன வயசுல இருந்தே குரும்பா ஓவியம் பண்ண ரொம்ப பிடிக்கும் 30 வருசமா குரும்பா ஓவியம் மட்டும்தான் பண்ணிட்டு இருந்தாரு. அவரு இறக்குறதுக்கு ஒரு நாள் முன்னாடி கூட ஸ்கூல் போய் பிள்ளைகளுக்கு குரும்பா ஓவியத்தைப் பற்றி சொல்லிக் கொடுத்தாரு.

எங்களுக்கு மொத்த 4 பிள்ளைங்க மூணு பொண்ணுங்க ஒரு பையன். எங்க சொந்த ஊரு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்க பழங்குடியின கிராமம் வெள்ளரிக் கொம்பை.
நாங்க இப்போ மேட்டுப்பாளையத்து மாறிட்டோம். இங்கதான் நான் கூலி வேலை செஞ்சி என் பிள்ளைங்களைப் பாத்துக்குறேன்.
கல், புற்கள், விலங்குகளின் சாணம் மற்றும் மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தி குரும்பா ஓவியம் பண்ணுவாங்க.
இது வரையிறதுக்கு குச்சி, இலை, வெள்ளை துணியதா பயன்படுத்துவாங்க. கிட்னா அப்பல இருந்து இத மட்டுதான் பயன்படுத்தினார்.
பத்ம ஶ்ரீ விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா. ஆனா கிட்னா இருந்து இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு.
கிட்னா குரும்பா ஓவியத்துகாக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு .
அவரு இருந்த வரைக்கும் நெறைய ஸ்கூலுக்குப் போய் குழந்தைங்களுக்கு குரும்பா ஓவியம் சொல்லுத்தருவாறு. நெறைய பிரைவேட் ஸ்கூல இருந்து அவங்களே கிட்னாவ கூப்பிடுவாங்க. பத்ம ஶ்ரீ அவரு இருந்தபோது கொடுத்து இருந்தா நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு” என்றார்.