செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி பாமக நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பாமக சார்பில் 17 ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.
சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளுக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி அழைத்திருக்கிறோம்.