பன்னா புலிகள் காப்பகம்: 57 வயதில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை | Panna Tiger Reserve: 57-Year-Old Elephant Gives Birth to Twin Calves

Spread the love

யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை

இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை

இது குறித்து தெரிவித்துள்ள பன்னா புலிகள் காப்பக நிர்வாகம், “சோனாபூர் கண்காட்சியில் இருந்து 1986 – ம் கொண்டு வரப்பட்ட அனார்கலி பெண் யானையை பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறோம்.

57 வயதான இந்த யானை அண்மையில் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றது. இரண்டுமே நல்ல நிலையில் உள்ளன. யானைகளைப் பொறுத்தவரை இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பன்னா புலிகள் காப்பக யானைகள் முகாமின் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *