பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராணுவம் உறுதி

Dinamani2f2024 052f2559ee0a D46c 452c 8977 0a39987f58902fap24149550478979.jpg
Spread the love

ஜம்மு: ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

இதுதொடா்பாக ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க ராணுவத்தின் வடக்கு மண்டலப் பிரிவுகள் உறுதிபூண்டுள்ளன. பல்வேறு முகமைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இடைவிடாத நடவடிக்கைகள் தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்: ஜம்மு பிராந்தியத்தில் பல்லாண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டதில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரை பரவலாக அமைதி நீடித்தது. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தால், ஜம்முவில் குறிப்பாக எல்லை மாவட்டங்களில் 2021-ஆம் ஆண்டில் பயங்கரவாத செயல்பாடுகள் மீண்டும் தலைதூக்கின. கடந்த சில மாதங்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *