மும்பை: அதானி குழுமத்திற்கு சொந்தமான மும்பை சர்வதேச விமான நிலையம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 1.36 கோடி பயணிகள் வளர்ச்சியைப் பதிவு செய்தது.
நாட்டின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம், முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.34 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றதாக தெரிவித்துள்ளது மும்பை சர்வதேச விமான நிலையம்.
வான்வெளி கட்டுப்பாடுகள், புவிசார் அரசியல் நிலைமைகள், மத்திய கிழக்கில் தற்காலிக வான்வெளி மூடல் மற்றும் சமீபத்திய விமான சம்பவங்களால் ஏற்பட்ட பயணிகளின் மனநிலையில் தொடர்ந்து தற்காலிக சரிவு இருந்தபோதிலும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டு வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக மும்பை சர்வதேச விமான நிலையம் தெரிவித்தது.
2026 காலாண்டில், விமான நிலையம் 82,369 விமானப் போக்குவரத்து இயக்கங்களை எளிதாக்கியது. இது ஆண்டுக்கு ஆண்டு 1.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்து, சர்வதேச விமானப் போக்குவரத்து இயக்கங்கள் 3.3 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்தது.